--- --:--:-- --

மகளிடம் அத்துமீறு முயன்ற தந்தை..! அம்மி கல்லால் தாக்கி கொலை செய்த மகள்..!

8

துபோதையில் மகளிடம் அத்துமீறு முயன்ற தந்தையை மகளே அம்மிக்கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த தெருக்கூத்து நாடக கலைஞர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

 

40 வயதான அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான அந்த நாடக கலைஞர் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார் .அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது 19 வயது மூத்த மகளிடம் அத்துமீற முயன்றுள்ளார்.

 

இதிலிருந்து தற்காத்துக் கொள்ள முயன்ற மகள் தந்தையின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதில் சுருண்டு விழுந்து தந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon