--- --:--:-- --

பள்ளி குழந்தைகள் மீதான அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?

12

ள்ளிகளில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தஞ்சையில் 12 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக மக்களிடம் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

 

மாணவி தற்கொலைக்கான உண்மையான காரணம் நேர்மையான விசாரணையின் மூலமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க வரும் குழந்தைகள் மீதான அத்துமீறல்களை இரும்பு கரம் கொண்டு அடக்காமல் வேடிக்கை பார்த்த உயர் அதிகாரிகளும் அரசுமே குற்றம்சாட்டப்பட்ட வேண்டியது என கமல்ஹாசன் அதில் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon