தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு..!
தஞ்சையில் இன்று சிலையை மர்ம நபர்கள் உடைத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை வடக்கு வீதியில் உள்ள சாலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு அடி உயரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலைக்கு அருகே டீக்கடை ஒன்று உள்ளது. வழக்கம்போல் டீக்கடைக்காரர் இன்று காலை கடையை திறக்க வந்த பொழுது எம்ஜிஆர் சிலை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த அதிமுகவினர் கொடுத்த தகவலினால் வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மர்மநபர்கள் டீக்கடைக்கு பின் எம்ஜிஆர் சிலையை வீசிச் சென்றது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.






