ராஷ்மிகாவை கியூட் என சொன்ன போது அவர் கொடுத்த ரியாக்சன் வைரல்..!
தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்த்துவிட்டார் ராஷ்மிகா. புஷ்பா படத்தின் மூலம் ஹிந்தியிலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அடுத்து ஹிந்தியில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் அவர். அதனால் அவரை அடிக்கடி மும்பையிலும் பார்க்க முடிகிறது.
நேற்று விமான நிலையம் வந்த அவரை மீடியாகாரர்கள் சூழ்ந்து படம் எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். வழக்கமாக மற்ற பிரபலங்கள் போஸ் கொடுத்துவிட்டு காரில் ஏறி சென்றுவிடுவார்கள். ஆனால் ராஷ்மிகா அவர்களிடம் பொறுமையாக பேசிக்கொண்டே நடந்து செல்கிறார்.
எப்படி இருக்கிறீர்கள் என கேட்ட அவரிடம் ‘எல்லோரும் நன்றாக இருக்கிறோம்’ என பதில் சொல்கின்றனர். மேலும் கேமராவில் இருந்து வரும் பிளாஷ் ரொம்ப ஸ்ட்ராங் ஆக இருக்கிறது எனவும் அவர்களிடம் ராஷ்மிகா கூறுகிறார். அப்போது ஒருவர் ‘நீங்க கியூட்’ என சொல்ல, ‘அப்படியா.. நன்றி’ என கூறி இருக்கும் ராஷ்மிகா கொடுத்த ரீயாக்ஷன் வைரலாகி வருகிறது.





