விஜய் டிவி சீரியல் நடிகைக்கு முடிந்த காதல் திருமணம்..!
சின்னத்திரை நடிகைகள் இதே துறையில் இருக்கும் நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான விஷயம் ஆகிவிட்டது. பல முக்கிய ஜோடிகள் இப்படி சின்னத்திரையில் இருக்கின்றனர்.
தற்போது விஜய் டிவி சிவா மனசுல சக்தி சீரியல் புகழ் நடிகை ஜனனி பிரதீப் தற்போது இன்னொரு சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
வித்யா நம்பர் 1 சீரியலில் நடித்து இருக்கும் இனியன் என்பவரை தான் அவர் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.





