--- --:--:-- --

தமிழகத்தில் தற்போது யாருக்கும் வாக்குரிமை இல்லை” SIR குறித்து வீடியோ வெளியிட்ட விஜய்

1

மிழ்நாட்டில் யாருக்கும் வாக்குரிமை இல்லை எனும் நிலை வரக்கூடும் என தவெக தலைவர் விஜய் சந்தேகம் எழுப்பியுள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டில் தற்போது யாருக்கும் வாக்களிக்க உரிமை இல்லை என்றால் நம்புவீர்களா என கேள்வியெழுப்பி உள்ளார்.

 

தான் யாரையும் பயமுறுத்தவில்லை என்றும், தமிழ்நாட்டில் யாருக்கும் வாக்குரிமை இல்லை என்ற நிலை வந்தால், அதற்கு வாக்காளர் சிறப்பு திருத்தமே காரணம் எனவும் விஜய் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இளம் வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமெனவும் விஜய் அறிவுறுத்தினார்.

 

ஆட்சியாளர்களின் கைப்பாவையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய விஜய், தவெகவினருக்கு விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

Right Menu Icon