--- --:--:-- --

இனி டோல்கேட்டில் வாகனங்கள் நிற்க வேண்டாம்..!

3

தேசிய நெடுஞ்சாலைகளில் மே ஒன்றாம் தேதி முதல் செயற்கைக்கோள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, ரொக்கங்களில் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், Fastag முறைக்கு மாற்றப்பட்டது.

 

இருப்பினும், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், அடுத்தகட்டமாக செயற்கைக்கோள் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அமல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்தது.அதன்படி, மே 1 ஆம் தேதி முதல், ஜி.பி.எஸ்.ஐ போன்று இந்தியாவின் பிரத்யேக புவியிடங்காட்டி அமைப்பான ஜி.என்.எஸ்.எஸ். மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

அதாவது, தேசிய நெடுஞ்சாலைகளுக்குள் வாகனங்கள் நுழைந்ததும், அதில் உள்ள மின்னணு தொழில்நுட்பத்துடன் கூடிய நம்பர் பிளேட் மற்றும் ON BOARD UNIT எனப்படும் கருவி மூலம் பயணத்தூரத்தை கணக்கிட்டு, தானாகவே பணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

முதற்கட்டமாக சரக்கு வாகனங்கள், பேருந்துகளில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, அதன் பிறகு தனியார் வாகனங்களில் செயல்படுத்தப்படும் என தெளிவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon