--- --:--:-- --

அதிமுகவில் இணைவதாக வெளியான தகவலுக்கு வைத்திலிங்கம் மறுப்பு..!

3

திமுகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்டோர் இணைந்தனர். இதில் மனோஜ் பாண்டியன் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். மற்றவர்கள் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் எனக் கூற, அவர் முதலில் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அண்மையில் நடந்த தேவர் குரு பூஜையில், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து அங்கு மரியாதை செய்தார்.

 

இதனையடுத்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் அங்கிருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

 

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இதற்கு வைத்திலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து வைத்திலிங்கம் தெரிவித்திருப்பதாவது; “மீண்டும் அதிமுகவில் நான் சேருவது என்பதில் உண்மையில்லை. நாளிதழில் வெளியானது உண்மைக்குப் புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, விஷமத்தனமான செய்தி” எனத் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon