தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் : உதயநிதி
சென்னை கிண்டி ராஜ்பவனின் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக பதவி ஏற்றார் உதயநிதி.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திமுகவினர் கொண்டாட்ட வருகின்றனர். அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர். முடிந்த வரையில் அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன். விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன்.
தமிழ்நாடு விளையாட்டு தலைநகராக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தோம், அதனை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன் என கூறியுள்ளார். இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




