--- --:--:-- --

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றியமைக்கப்பட்ட மாநில அமைச்சரவை..!

4

மைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பனுக்கு கூட்டுறவு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதி வேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்ய நாதன் சுற்றுச்சூழல் துறையை தொடர்ந்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon