திருச்சி: யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவர் கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் நம்பியார் இவரது மகன் அர்ஜுன் நம்பியார்.
இவர் அரசு அனுமதி இல்லாமல் நாட்டு கை துப்பாக்கி வைத்திருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ஜுன் நம்பியாரிடம் இருந்த நாட்டு கை துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிப்பட்ட அர்ஜுன் நம்பியார் விசாரணையில் வேட்டையாடுவது எங்களது குல தொழில் அதற்காக செல்போனில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் தொடர்ந்து நவல்பட்டு போலீசார் அர்ஜுன் நம்பியாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





