இன்று முதுநிலை நீட் தேர்வு..!
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து 25,000 மருத்துவர்கள் உள்பட நாடு முழுவதும் 2 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23ல் நடக்க இருந்த இத்தேர்வு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






