--- --:--:-- --

திருப்பூர் வடக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..!

3.1

திருப்பூர் வடக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திருப்பூர் அவிநாசி சாலை, எஸ்.ஏ.பி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஜன்னத்துல் பக்கி பள்ளிவாசலில் வளாகத்தில் நடந்தது.

 

நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஜெ.முகமது ரஃபி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.முகமது ஹசன், பொருளாளர் எம்.ஐ. அஜ்மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனுப்பர்பாளையம் மஸ்ஜிதே சித்திக் பள்ளிவாசல் தலைவர் எஸ்.முபாரக் அனைவரையும் வரவேற்றார்.

 

ஜன்னத்துல் பக்கி பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ரஹீம் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு சிறப்பு துஆ என்னும் பிரார்த்தனை செய்தார். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான ந. தினேஷ் குமார், திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் சேர்மனுமான ஆர்.கிருஷ்ணன், ம.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். நாகராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் என். சையது முஸ்தபா, வடக்கு மாநகர திமுக பொறுப்பாளர் ஈ.தங்கராஜ் ஆகியோர் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான தமிழ் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. பின்னர் சிறப்பு விருந்தினர்கள் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சியும், பழங்கள், உள்பட பல உணவு வகைகளையும் உண்டனர். மேயர் தினேஷ்குமார் பேசும் போது ஜன்னத்துல் பக்கி பள்ளிவாசல் கபர்ஸ்தானில் புதைக்கும் இடத்தில் உள்ள மண்ணை எடுத்துவிட்டு மக்கும் மண்ணை போடவும், அப்பகுதியில் உள்ள நால்ரோட்டில் உயர்மின்விளக்கு கோபுரம் அமைத்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

அதேபோல் முன்னாள் சேர்மன் கிருஷ்ணன் பேசும்போது வக்ப் போர்டு பிரச்சினையில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்க ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். முடிவில் கணக்கம்பாளையம் ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது ரஃபீக் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்.வி.காலனி, மஸ்ஜிதே அஹமத் தக்னி பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி.ஏ.லியாகத் அலி, பாரதி நகர், தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் தலைவர் ஏ.அப்துல் ஜப்பார், பாண்டியன் நகர், இதாயத்துல் முஸ்லிமீன் பள்ளிவாசல் செயலாளர் எப்.அஸ்கர் அலி, அண்ணா நகர் மஸ்ஜிதே முஹமத் இஸ்லாம் பள்ளிவாசல், தலைவர் பி. உம்ர்தீன், மகளிர் உதவும் சங்கம் செயலாளர் ஏ.சித்திக் பாஷா, சாதிக்பாட்ஷா நகர், மஸ்ஜிதே மதீனா பள்ளிவாசல் தலைவர் ஏ.இனாயத்துல்லா ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் வடக்கு பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட இஸ்லாமியர்கள் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Right Menu Icon