--- --:--:-- --

திண்டுக்கல்லில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்..!

7

ரே பிரசவத்தில் குறைந்த எடையுடன் பிறந்த மூன்று குழந்தைகள் ஒரு மாதத்திற்கு பிறகு தாயிடம் ஒப்படைக்கப்பட்டன. குழந்தைகளை ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பிரிவில் தாயைப் போல் பராமரித்த திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

திண்டுக்கல் சிலப்பாடு பகுதியைச் சேர்ந்த ரிஷா நிறை மாத கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு தைராய்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மூன்று குழந்தைகள் கருத்தரித்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

 

பின்னர் ரிஷாவுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மூன்று குழந்தைகளையும் உயிருடன் மீட்டனர்.

 

மேலும் பிறந்த மூன்று குழந்தைகளும் மிகக் குறைந்த எடையில் இருந்த நிலையில் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து குழந்தைகளை 35 நாட்களுக்கு மேலாக பராமரித்து வந்துள்ளனர். இது குறித்து பேசிய பெற்றோர் ஆபத்தான நிலையில் பிறந்த மூன்று குழந்தைகளையும் பத்திரமாக மீட்ட மருத்துவர்கள் தங்கள் குழந்தைகள் போல் பார்த்துக் கொண்டதாக தெரிவித்தனர்.

 

Right Menu Icon