--- --:--:-- --

அழகாக மன்னிப்பு கேட்டு வண்டியை திருடி சென்ற திருடர்கள்..!

10

திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் புறவழிச்சாலை அருகே சுவரில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு வங்கி மேனேஜர் வீட்டில் திருடர்கள் பைக்கை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

செல்வம் நகரை சேர்ந்த தனியார் வங்கி மேனேஜர் இளங்கோ வீட்டில் புகுந்த திருடர்கள் உள்ளே எதுவும் கிடைக்காததால் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை திருடி சென்றனர்.

 

அத்துடன் சுவரில் சாரி பிரதர் சிஸ்டர் மன்னித்துவிடுங்கள் என்று அழகான கையெழுத்தில் மன்னிப்பு வேறு கேட்டிருந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Right Menu Icon