--- --:--:-- --

தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை..!

2

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்து புதிய வரலாறு காணாத விலையை தொட்டு வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

 

நேற்று முன் தினம், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,040க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலையே இருப்பதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.12,040க்கும், ஒரு சவரன் ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.198க்கும், ஒரு கிலோ ரூ.1,98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon