கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி..!
கள்ளக்குறிச்சி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார். கல்வராயன் மலைகுடியை சேர்ந்த தேவராஜ் என்பவர் கடந்த 2ஆம் தேதி காணாமல் போன நிலையில் சில நாட்கள் கழித்து அழுகிய நிலையில் கோட்டப்பட்டி என்ற இடத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி புஷ்பாவை பிடித்து போலீசார் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. புஷ்பாவிற்கு சேலத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் இடையே உள்ள தவறான பழக்கத்தை தேவராஜ் கண்டித்து வந்துள்ளார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு எடுத்த புஷ்பா காதலன் மணியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
உடன் தனது உறவினர் சுரேஷ் என்பவரையும் மணி அழைத்துச் சென்றவர்களில் மூவரும் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தேவராஜ் கழுத்தை நெரித்துக் கொன்று உடலை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று வீசியுள்ளனர். இது தொடர்பாக மனைவி புஷ்பாவை கைது செய்த போலீசார் தேடி வருகின்றனர்.






