எளிய முறையில் நடைபெற்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் திருமணம்!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பினராய் விஜயனின் மகள் வீணா இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவரான முகமது ரியாசை திருமணம் செய்து கொண்டார்.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மிகவும் குறைந்தளவிலான விருந்தினர்களே விழாவில் பங்கேற்றனர். வீணா பெங்களூருவில் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
ரியாஸ் கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் வேட்பாளராக மாக்ஸிசிட் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். 43 வயதாகும் வீணா, ரியாஸ் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும் ஏற்கனவே ரியாசுக்கு இரண்டு மகன்களும், வீணாவுக்கு ஒரு மகளும் உள்ளனர்.






