தரமற்ற எந்திரத்தால் அதிக அளவில் சிசுக்கள் இறப்பு..!
ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் தொற்றால் உயிரிழப்பதாக புகார் அளித்த நிலையில் ஸ்கேன் இயந்திரத்துக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக புகார் இருந்தது இதனையடுத்து மருத்துவ கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில் புகார் உண்மை என்பது தெரிய வந்தது.
அறிவுறுத்தலுக்கு பிறகு தவறை சரி செய்யாமல் இருந்ததால் மருத்துவ நல பணிகள் இணை இயக்குனர் பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஸ்கேன் இயந்திரத்தின் உரிமையை ரத்து செய்து இயந்திரத்திற்கு சீல் வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





