காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்களை மாவட்ட அளவிலேயே முடிவு செய்ய வேண்டும்..!
பள்ளிகளில் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்களை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. பள்ளிக்கூடங்களில் காலாண்டு தேர்வுகள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வைத்து தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த முறையில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகி சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில் மாவட்ட அளவிலேயே வினாத்தாள்களை முடிவு செய்து கொள்ளவும் தேர்வு தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்து கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





