மேலும் சரிந்த தங்கத்தின் விலை..!
தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக குறைந்தது.தொடர்ந்து நவம்பர் மாதம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
கடைசியாக நேற்று மாலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,900க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து , ஒரு சவரன் தங்கம் ரூ. 95,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி இன்று காலை (நவம்பர் 14) 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.11,840க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.94,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.9,875க்கும் சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.79,000க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் அதிரடியாக ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.180க்கும், ஒரு கிலோ ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை (நவம்பர் 14) 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,740க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.93,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.9,790க்கும் சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.78,320க்கும் விற்பனை செய்யபடுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.180க்கும், ஒரு கிலோ ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






