குறையப்போகும் தங்கம், வெள்ளி விலை..!
இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் நகை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 15ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,860க்கும், ஒரு சவரன் ரூ.94,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.207க்கும், ஒரு கிலோ ரூ.2,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரும் நாட்களில் குறையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது அடுத்த சில நாட்கள் அல்லது வரும் வாரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரும் சரிவு ஏற்படலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
மேலும், இதுவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வின் இறுதி கட்டமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கோயலின் மதிப்பீடுகளின்படி, தங்கம் 30 முதல் 35% ஆகவும், வெள்ளி 50% ஆகவும் குறைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். அதன்படி, தங்கம் 35% குறைந்து, விலை ரூ.77,701 ஆகவும், வெள்ளி 50% குறைந்து, ரூ.77,450 ஆக விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.
கோயலின் கூற்றுப்படி, தங்கம் $2,600–$2,700 ஆகக் குறைந்தவுடன், அதை மீண்டும் வாங்குவது பாதுகாப்பானது. இந்த நிலையில், தங்கம் உலகின் சிறந்த முதலீடாக மாறும். ஆனால், வெள்ளி வாங்குபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏனெனில், உலகளாவிய மந்தநிலை நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தற்போது ஏற்ற இறக்கமாக இருந்தாலும், இந்த உயர்வு நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்றும் கோயல் தெரிவித்துள்ளார். தங்கம் மற்றும்வெள்ளி விலை நிர்ணய முறையில் மாற்றம், ஒரு பெரிய விலை குறைப்பு வரப்போகிறது என்றும், முதலீட்டாளர்கள் இந்த சரிவுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கோயல் நம்புகிறார்.





