கோவில் நிர்வாகியை கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அனுமதியின்றி உள்ளே வர வேண்டாம் எனக் கூறிய கோவில் நிர்வாகியை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. திருத்தணி சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தனது நண்பர் ஒருவருடன் கோவிலுக்கு வந்துள்ளார்.
அப்போது கோவில் ஊழியர் சரவணா முன்னெச்சரிக்கையாக யாருக்கும் அனுமதி இல்லை எனக் கூற காவல் ஆய்வாளர் எனக்கே ஆணை தருகிறாயா எனக்கூறி முருகன் அவரை அறைந்துள்ளார்.







