காலாவதியான மருந்து கொடுத்த மருந்தகம்.. சாப்பிட்ட மாணவிக்கு நேர்ந்த நிலை..!
D59K1A
தாராபுரம் அருகே காலாவதியான மருந்து சாப்பிட்ட மாணவி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காலம்பாளையத்தை சேர்ந்த அலாவுதீன், சகீரா பானு தம்பதியினரின் 15 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த இரண்டு தினங்களாக காய்ச்சல் மற்றும் சளி பிரச்சனையால் அவதி அடைந்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் அருகில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை, மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இதனை சாப்பிட்ட மாணவி வாந்தி எடுத்ததை தொடர்ந்து மயக்கம் அடைந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சாப்பிட்டது காலாவதியான மருந்து என தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.



