--- --:--:-- --

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர் அடித்து கொலை..!

1

ள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் காங்கேயனூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் வேலை வாங்கித் தருவதாக கூறி 2 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொடுத்து ஏமாற்றியதாக தெரிகிறது.

 

பணம் கொடுத்து ஏமாந்த கோபால் ஏழுமலை என்பவரது குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் படுகாயமடைந்த ஏழுமலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Right Menu Icon