நடுரோட்டில் திருப்ப முடியாமல் திணறிய லாரி டிரைவரால் பரபரப்பு..!
குறுகிய சாலையில் லாரியை திருப்ப முடியாமல் திணறிய ஓட்டுனரால் திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்த லாரி வழிமாறி தவறான பாதையில் சென்றது. இதனை அறிந்த ஓட்டுனர் லாரியை திருப்ப முயன்றார். குறுகிய சாலை என்பதால் லாரியை திருப்ப முடியாமல் ஓட்டுநர் திணறினார்.
இதனால் திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் பின்னர் அணிவகுத்து நின்ற அனைத்து வாகனங்களையும் சீர் செய்து லாரியை திருப்ப உதவினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





