ஏன் பள்ளிக்கு போகவில்லை என கேட்ட ஆட்சியர்.. மாணவிகளின் பதிலால் அதிர்ச்சி..!
திருவண்ணாமலை மாவட்டம் அஸ்தாம்பாடி கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு அரசாங்கத்தால் தட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அங்கு பள்ளிக்கு செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என விசாரித்த பொழுது திடீரென கூட்டத்திலிருந்து ஒரு பெண் பள்ளிக்கு செல்ல சாதி சான்றிதழ் தேவை என்று ஆட்சியரிடம் தைரியமாக கூறியுள்ளார்.
உடனடியாக அதை கவனத்தில் கொண்ட ஆட்சியார் வருவாய்துறை அதிகாரிகளை அழைத்து அந்த பகுதியில் முகாம் அமைத்து சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தங்கள் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியருக்கு அந்த பகுதி மக்கள் மனமாற நன்றி தெரிவித்தனர்.





