மனைவியை ஆபாசமாக திட்டிய நண்பனை கணவர் வெட்டிக் கொலை..!
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மனைவியை ஆபாசமாக திட்டிய நண்பனை கணவர் வெட்டிக் கொலை செய்தார். தொழிலில் ஈடுபட்டிருந்த நண்பர்கள் சிரஞ்சீவி இடையே தொழில் போக்கினால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.
மது போதையில் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்ற பாண்டியன் அவரது மனைவியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட சிரஞ்சீவி குடிபோதையில் தனது கூட்டாளியோடு சேர்ந்து பாண்டியனின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் வெட்டியுள்ளார்.
அங்கிருந்து தப்பி ஓட முயன்றவர்களை பிடித்த மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






