--- --:--:-- --

ஜோதிகாவின் படத்தால் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை பெற்றோரிடம் கூறிய சிறுமி..!

3

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நடிகை ஜோதிகா அறிவுரை வழங்கியுள்ளார். ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் படம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் மையப்படுத்தி உருவாகி இருந்தது.

 

பொன்மகள் வந்தாள் படத்தை சென்னை ராயபுரத்தில் 9 வயது சிறுமி பார்த்துவிட்டு நாற்பத்தி எட்டு வயது நபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

 

இந்த செய்தியை பார்த்த பலரும் பொன்மகள்வந்தாள் படத்தை வலைத்தளத்தில் பாராட்டினார். இந்த செய்தியை நடிகர் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திதில் வெளியிட்டுள்ளார்.

 

ஒவ்வொரு முறையும் ஒரு பெண் அவளுக்காக எழுந்து நிற்கும் பொழுது அவள் தன்னை அறியாமலேயே எல்லா பெண்களுக்காகவும் எழுந்து இருக்கிறார் எனவும் கூறியுள்ளார்.

Right Menu Icon