விவசாய நிலத்தில் இடி விழுந்ததால் ஏற்பட்ட நீர் ஊற்று…!
நாமக்கல் அருகே விவசாய நிலத்தில் இடி விழுந்த இடத்தில் ஊற்றுப்போல நீர் பீறிட்டு கிளம்பியது. இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். சேந்தமங்கலம் ஊருக்கு அருகில் இருக்கும் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் சரவணன் என்பவரது விவசாய நிலத்தில் இடிவிழுந்தது.
இதனால் நிலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து திடீரென நீர் ஊற்று பெருக்கெடுத்து இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் நீர் சூழ்ந்து இருக்கிறது. இதனை அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




