--- --:--:-- --

12 ஆண்டுகளை கடந்த பொல்லாதவன்! தனுஷ் ரசிகர்களின் பல்சர் ரைடு!

3

தமிழ் சினிமாவில் ஆண்டுக்காண்டு பல திரைப்படங்கள் வந்தாலும் சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றது. அந்த வெற்றி பெற்ற திரைப்படங்கள் அனைத்தும் சில காலங்கள் பேசப்பட்டாலும் மிக சில திரைப்படங்களே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்றது.

 

ஒரு திரைப்படத்தின் கதை அம்சம் ஒரு பக்கம் இருந்தாலும் அப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மிக மிக முக்கியம். அதுவே இயக்குனரின் சாமர்த்தியம் என்று கூட சொல்லலாம். இயக்குனர் பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்ற மூத்த கலைஞர்களின் திரைப்படங்களில் பிரபலமில்லாத நடிகர்கள், நடிகைகள் கூட பேசப்படுவார்கள்.

 

ஏனென்றால் கதையின் ஆழம் இயக்குனர்களுக்கு மட்டுமே தெரியும் .புத்தகம் போல சினிமா கிடையாது. காட்சிகளை நடைமுறை வாழ்வியலோடு எழுதுவது எளிது. ஆனால் அதனை காட்சிப்படுத்துவது மிக மிகக் கடினம். அந்த வகையில் நவம்பர் எட்டாம் தேதி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பொல்லாதவன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடப்பட்டது.

 

அறிமுக இயக்குனரான வெற்றிமாறன் தனது முதல் படைப்பை வெற்றிகரமாக தொடங்கினாலும் அந்த திரைப்படம் பல கலைஞர்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். தமிழில் முதன்முறையாக நடித்த நடிகர் கிஷோரின் செல்வம் கதாபாத்திரம் வெகுவாகப் பேசப்பட்டது.

இதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு பிறகு அவர் தமிழ் திரையுலகில் உச்சத்திற்கே சென்றார் என்று கூட சொல்லலாம். இப்படி சொல்லிக்கொண்டே போனால் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த அவுட் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பவன்,காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு ஒரு வில்லன் என்ற இமேஜை டேனியல் பாலாஜிக்கு கொடுத்ததும் இந்த படமே.

 

சினிமாட்டோகிராஃபி வேல்ராஜுக்கு தமிழில் தனது இரண்டாவது படமான இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறனுக்கும், தனக்குமான இடைவெளியை அதிகரிக்க செய்தது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் அடுத்து வெற்றிமாறன் இயக்கிய படங்களில் விசாரணை திரைப்படத்தை தவிர ஆடுகளம், வடசென்னை, அசுரன் என்று அனைத்திற்கும் வேல்ராஜ் தான் சினிமாடோ கிராஃபி.

 

வெயில் திரைப்படத்திற்கு பிறகு சொதப்பலான இசையை கொடுத்துக்கொண்டிருந்த ஜிவி பிரகாஷ்க்கு இந்த திரைப்படத்தின் பீஜியம், இசை ,பாடல்கள் மூலம் தமிழ் சினிமாவில் சொல்லக்கூடிய இசையமைப்பாளர்கள் வரிசையில் அமர்ந்து கொண்டார். படத்தில் பெரிய அளவிலான கருத்துக்களோ அல்லது பிரம்மாண்ட காட்சிகள் கிடையாது தான்.

 

ஆனால் நடிகர் தனுஷின் இயல்பான ஒரு விளிம்புநிலை சாதாரண மக்களாக வாழும் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. நடிகை ரம்யா, பானுப்பிரியா, சந்தானம் கருணாஸ் என்று அனைவரின் நடிப்பும் பிரபலமாகவே இந்த படத்தில் பேசப்பட்டது. மேலும் முக்கியமான ஒரு நிகழ்வு என்னவென்றால் அது இந்தப் படத்திற்கு பிறகுதான் பல்சர் பைக் விற்பனை தமிழகத்தில் பட்டையை கிளப்பியது என்று சொல்லலாம்.

 

இந்த திரைப்படத்தின் முக்கிய புள்ளியே பல்சர் பைக்கை வைத்துதான் கதைகளம் நகரும். கதாபாத்திரத்தை காட்டிலும் இந்த பைக்கின் பங்கும் படம் வெற்றி பெறுவதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon