சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. கர்ப்பமானதால் சிறுமி விபரீத முடிவு..!
அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு.
கூலி தொழிலாளியான இவர் அரியலூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவியை காதலித்ததாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கர்ப்பமான சிறுமி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றார் சிறுமி.
அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் பாலியல் வன்கொடுமையில் உடந்தையாக இருந்த ராஜுவின் தந்தை சீனிவாசனை கடந்த 16ஆம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ராஜுவை இன்று கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





