--- --:--:-- --

சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன்..வெடித்து சிதறிய செல்போன்..!

7

செல்போன்கள் வெடிக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் அரசு அதிகாரி ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களையே தற்போது காண்பது அரிது என்று சொல்லும் அளவிற்கு அனைவர் கைகளிலும் செல்போன் தவழ தொடங்கியுள்ளது. செல்போன்களை எந்நேரமும் சிலர் பயன்படுத்திக் கொண்டு இருப்பதையும் காண முடிகிறது.

 

இன்னும் சிலரோ.. சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிக் கொண்டு இருப்பது, கேம் விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். செல்போன்களை இப்படி பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என செல்போன் நிறுவனங்களும் எச்சரிக்கின்றன.

 

இந்த சூழலில் சமீப காலமாக செல்போன்கள் வெடிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கேரளாவில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி செல்போன் வெடித்ததில் பலியானாள். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

அதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டையில் செல்போனில் சார்ஜ் செய்து கொண்டே பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செல்போன்கள் வெடிக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து ஏற்படுவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே செல்போன் வெடித்ததில் அரசு அதிகாரி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Right Menu Icon