--- --:--:-- --

தொழிலதிபரின் மகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய கும்பல்..!

4

ன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் அவரை கடுமையாக தாக்கி விட்டு 200 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். பெட்ரோல் பங்க் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

 

இவரது மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தனது இரண்டாவது மகள் அக்க்ஷயாவுடன் மோகன்தாஸ் வீட்டிலிருந்துள்ளார். அப்பொழுது இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு முகமூடி கொள்ளையர்கள் மோகன் தாஸ் தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர்.

 

இதில் அவர் பலத்த காயம் அடைந்த நிலையில் அக்ஷயா கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய நபர்கள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 200 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். இதனால் பதற்றமடைந்த அக்ஷயா படுகாயம் அடைந்த தனது தந்தையை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

 

சம்பவம் நிகழ்ந்த இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon