மதுரையில் மூதாட்டி கொலை.. சமையல் ஊழியர் கைது..!
மதுரை தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 நாட்களுக்கு பிறகு சமையல் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மூதாட்டி முத்துலட்சுமி அங்குள்ள ஏழாம் தளத்தில் கடந்த 12ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை நடந்த நேரத்தில் அந்த பகுதி வழியாக சென்ற 70-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதில் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் உள்ள உணவக ஊழியர் அழகர்சாமிடம் விசாரித்த பொழுது அவர் மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது.
அழகர்சாமியிடம் எட்டு மாதங்களுக்கு முன்பு மூதாட்டி முத்துலட்சுமிக்கு நாற்பதாயிரம் ரூபாய் வழங்கியதாகவும் ஆனால் முத்துலட்சுமி பணத்தை திருப்பி கொடுக்காமல் அழகர்சாமி குடும்பத்தினரை அவதூறாக பேசியதால் கொலை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தனியாக இருந்த முத்துலட்சுமி கீழே தள்ளி கொலை செய்த அழகர்சாமி அவர் அணிந்திருந்த நகைகளை திருடி மானாமதுரை அடகு கடையில் விற்றதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





