--- --:--:-- --

வளைவில் நிலைதடுமாறி சாலையோர குளத்துக்குள் இறங்கிய பேருந்து..!

6

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த நிலையில் சாலையோரம் குளத்துக்குள் பேருந்து இறங்கியது.

 

சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று வானம்பாடி அருகே சென்று கொண்டிருந்த பொழுது வளைவு ஒன்றில் இருசக்கர வாகனமும் சைக்கிளும் ஒன்றாக வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு வாகனங்களும் பேருந்தை பார்த்து தடுமாறிய நிலையில் பேருந்து ஓட்டுனர் பதற்றமடைந்த பேருந்தை சாலையோரமாக திரும்பியுள்ளார்.

 

இருப்பினும் இரு சக்கர வாகனம் மீது பேருந்து பலமாக மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.பதற்றமடைந்தால் நிலைதடுமாறிய பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.

 

Right Menu Icon