பேருந்து நிலைய கழிவறையில் கிடந்த பச்சிளம் குழந்தை..!
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறையில் குழந்தை ஒன்று கிடப்பதாக கழிப்பிடத்திற்கு சென்றவர்கள் கூறியதன் பேரில் கழிப்பிடத்தை நிர்வகிக்கும் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்பொழுது பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தை பிளாஸ்டிக் பாட்டில்களால் மூடிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






