ரயில்வே சுரங்கப்பாதையில் மூழ்கிய மழை நீரால் சிக்கிய சொகுசு கார்..!
திண்டுக்கல்லில் ரயில்வே சுரங்க பாதையில் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியது. அப்பொழுது தண்ணீரின் அளவு தெரியாமல் காரில் வந்தவர்கள் ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிக்கொண்டனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஜேசிபி உதவியுடன் கோவிந்தராஜ் மற்றும் மனோகரன் ஆகியோரை காப்பாற்ற திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ஜெயபிரகாஷ் வருவாய் ஆய்வாளர் சம்பத் நெடுஞ்சாலைத்துறை ஏடி லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.






