--- --:--:-- --

இணையதள பக்கத்தில் பாலியல் தொல்லை! இளைஞரால் நடிகைக்கு நிம்மதி இல்லை!

2.1

பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயகருக்கு சமூக வலைதளம் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து மன்னித்து அனுப்பியுள்ளார். ஆபாச கமெண்டுகளை பதிவிட்டு தொல்லை கொடுத்தவரை மன்னித்தது ஏன்? பிரபலங்களுக்கு சமூகவலைதளங்கள் மூலம் தொல்லை தருவது ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளது.

 

தற்போது அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர். அவர் தனது பிரச்சனையை தைரியமாக எதிர்கொண்டு தீர்த்தது எப்படி? ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நடிகைகள் தங்கள் முகநூல் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

 

அப்படி உரையாடிய நடிகை நிலா ஜூனியர் என்டிஆர் ரசிகர்களின் தொல்லைக்கு ஆளாகி ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதே போன்று மற்றொரு சம்பவம் கேரளாவில் நடந்து உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் தனது கருத்துக்களையும், புகைப்படங்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

 

இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது வழக்கம். சிலர் அவரது அழகை வர்ணிப்பதும் உண்டு. சிலர் எல்லைமீறி ஆபாசமாக வர்ணிக்கவும் தொடங்கிவிடுவர். இந்த நிலையில் இவரது பக்கத்தில் ஒரு நெட்டிசன் ஆபாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் ஆவேசமான அபர்ணா நாயர் அவரது பெயர் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் அவர் தெரிவித்திருந்த கருத்துக்களை குறிப்பிட்டு ஆவேசமாக சாடியிருந்தார்.

 

இதுபோன்ற மோசமான கருத்துக்களை பதிவிட்டு தங்களின் பாலியல் கற்பனைகளை தீர்த்துக் கொள்வதற்கான தளம் அல்ல இது என காட்டமாக தெரிவித்திருந்தார். மேலும் நான் உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யப் போகிறேன் என்றோ, உங்கள் கருத்துக்களை புறக்கணிக்க போகிறேன் என்று நினைத்தால் அது தவறானது.

 

இது போன்ற அருவருப்பான நடத்தைகளை சகித்துக்கொள்ள நான் இங்கு இல்லை. நான் எனது பணியை விளம்பரப்படுத்த இங்கே இருக்கிறேன். உங்களுக்கு முப்பது வினாடி சந்தோஷத்தை கொடுப்பதற்கு அல்ல என காட்டமாக கூறியிருந்தார்.பின்னர் நெட்டிசனின் எல்லை மீறல் குறித்து கேரள சைபர் கிரைமில் புகார் தெரிவித்திருந்தார்.

 

அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை பிடித்தனர். பின்னர் அபர்ணாவை வரவழைத்து அவரது முன்னிலையில் விசாரணை நடத்தினார். ஆபாச கருத்துக்களை பதிவிட்டு அது குறித்து அவரிடம் அபர்ணா நாயர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அந்த நெட்டிசன் மன்னிப்பு கேட்டதை அடுத்து அவருடைய குடும்ப சூழலை அறிந்து எழுதி வாங்கிக்கொண்டு புகாரை வாபஸ் பெற்று உள்ளார். இதையடுத்து நடிகை அபர்ணாவின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிலர் அப்படி விட்டிருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon