உலகளவில் 6 மணி நேரம் முடங்கிய ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்..!

நேற்றிரவு முதல் முடங்கியிருந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் செயலிகள் ஆறு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கின. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்களை உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்திய நேரப்படி இரவு 9.30 மணி அளவில் இருந்து உலகம் முழுவதும் இந்த சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர். பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என கூறியிருந்தனர் .

 

இந்த நிலையில் ஆறு மணி நேரத்திற்கு பிறகு காலை சுமார் 4 மணியளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைதளங்கள் அடுத்தடுத்து செயல்படத் துவங்கின. இதுகுறித்து ட்விட்டர், பேஸ்புக் பதிவில் உலகெங்குமுள்ள பயனாளர்களுக்கு மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சேவைகளை முழு அளவில் மீண்டும் வழங்க கடுமையாக பணியாற்றி வருவதாகவும் தொடர்ந்து முழு சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் காரணமாக பேஸ்புக் இன்ஸ்டாகிராம் வாட்ஸ் அப் செயலி எதற்கு முடங்கியது என்பது குறித்து அந்த நிறுவனம் விளக்கம்
அளிக்கவில்லை.


வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வரும் வாழ்த்துச் செய்திகள் மூலம் சைபர் தாக்குதல்?

வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வரக்கூடிய புத்தாண்டு வாழ்த்து செய்திகள் மூலமாக சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பொதுமக்கள், மொபைல் பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வாழ்த்து செய்திகளோடு வரும் லிங்கை கிளிக் செய்தால் செல்போன்களில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஆகவே தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்குகளுக்கு உடனே செல்ல வேண்டாம் எனவும் அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


வாட்ஸ்அப், தொலைபேசி மூலம் மக்கள் குறைகளை தெரிவிக்கலாம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

 

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தயாநிதிமாறன் மக்கள் தங்கள் குறைகளை வாட்ஸப், தொலைபேசி மற்றும் நேரில் வந்து தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

 

திமுக ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை என பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு மக்கள் விரும்பாத பொன்ராதாகிருஷ்ணன் தங்களை பற்றி விமர்சிப்பது நகைச்சுவையாக உள்ளது என கூறினார்.


2 மணி நேரத்திற்கு மேலாக பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் பாதிப்பு

பிரபல சமூக வலைதளங்கலான பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் புகைப்படங்களை பதிவேற்றல் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாததால் பயானாளர்கள் அவதி அடைந்து உள்ளனர். இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நீடித்த இந்த பிரச்சனையால் சமூகவலைத்தள செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

குறிப்பாக ஃபேஸ் புக்கில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் எதும் தெரியாததாலும், வாட்ஸ் ஆபில் அனுப்பப்பட்டுள்ள புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய முடியாததாலும் இந்த சமூக வலைதளங்களை மையமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனங்கள் பாதிப்படைந்தன. புகைப்படங்களை செல் போன்களில் பதிவேற்றம் செய்ய முடியாததால் பயனாளிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

 

பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகிய மூன்றும் ஃபேஸ் புக் நிறுவனத்தின் கீழ் இயங்குவதால் அவற்றின் சர்வரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். பொதுவாக சமூக வலைதளங்கள் முடங்கும் போது பிரச்சனை உடனடியாக சரிசெய்யபடும் நிலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பிரச்சனை சரி செய்யபடவில்லை.