தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அந்த அட்டவணையை அறிவித்தார்.
அப்போது பேசிய அவர் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி நிறைவடையும் எனவும், பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு ஒன்பதாம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி நிறைவடையும் என்றும் கூறிய அவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி நிறைவடையும் என குறிப்பிட்டார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது














