பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மசாலா பூரி இலவசம்..!

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தனது கடைகளில் இலவசமாக மசாலா பூரி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சண்டிகரை சேர்ந்த ஒருவர் அறிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக சைக்கிளில் உணவு வியாபாரம் செய்து வருகிறார்.

 

ஆனால் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இலவசமாக பூரி வழங்கி மன் கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் வாழ்த்தைப் பெற்றார். இந்த நிலையில் நாடு முழுவதும் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர்கள் செலுத்தப்படுகிறது.

 

இதனை அடுத்து மீண்டும் தனது பழைய யோசனையை செயல்படுத்த தொடங்கியுள்ளார். கொளுத்தும் வெயில் சைக்கிளில் உணவை அளிப்பவரின் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.


பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல்வர்..!

கொரொனா பூஸ்டர் தடுப்பூசியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் செலுத்திக் கொண்டார். தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி போடும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசியை முதலமைச்சர் செலுத்திக் கொண்டார். ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி குத்திக் கொண்ட நிலையில் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளார்.

 


பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி தேவை ..!

டெல்லியில் பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் கொரொனா தொற்று நடவடிக்கைகள் தொடர்பாக துணைநிலை ஆளுநர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.