மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் சமர்ப்பிப்பு
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில திட்ட குழுவானது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாகும்.
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நலத் திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்தல் மற்றும் அரசு ஆளுகையில் எழும் புதிய தேவைகளுக்கேற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்ட குழு நல்கி வருகிறது.






