+2 தேர்வை சரியாக எழுதமுடியவில்லை என மாணவர்கள் புகார்..!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எளிதாக இருந்தாலும் தேர்வு நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என தஞ்சை மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தமிழ் தேர்வு மிக எளிதாக இருந்தது என்றும் ஆனால் தேர்வு நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் கைகள் வேர்த்துக் கொட்டி வினாத்தாள்கள் விடைத்தாள்கள் அழுக்காக மாறியது எனவும் தெரிவித்தார்.
இதனால் தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் வெயில் நேரத்தில் தேர்வு எழுத முடியவில்லை எனவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.






