--- --:--:-- --

திடீரென பிரேக் பிடித்த சரக்கு வாகனத்தால் விபத்து..!

6

விழுப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த இரு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டது. இதில் பல பேர் படுகாயமடைந்தனர்.

 

மயிலம் அடுத்துள்ள சந்திப்பு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon