அமரன் படத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்..படக் குழுவுக்கு மாணவர் நோட்டீஸ்..!
அமரன் படத்தில் காட்சி ஒன்றில் செல்போன் எண் காட்சிப்படுத்தப்பட்டதால் அந்த எண்ணை பயன்படுத்தும் மாணவர் ஒரு கோடி ரூபாய் இழப்பு கேட்டு பட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அமரன் திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி ஒரு துண்டு சீட்டில் தனது தொலைபேசி எண்ணை கொடுப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த தொலைபேசி எண்ணை சென்னையை சேர்ந்த ஒரு மாணவர் பயன்படுத்தி வரும் நிலையில் சில நொடிகள் மட்டுமே வந்த அந்த காட்சியால் மாணவர் பல நாட்களாகவே தூங்கவும் படிக்கவும் முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சாய்பல்லவிக்கு வாழ்த்து கூற வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் தொடர்ந்து அவரை தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதாக கூறப்படுகிறது. எந்த பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.






