தேவைப்பட்டால் மீண்டும் போராட்டம்: மருத்துவர்கள்
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நியாயம் கேட்டு போராடிவந்த ஜூனியர் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
நாளை முதல் கொல்கத்தாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ சேவையை வழங்க உள்ளதாக கூறிய அவர்கள், எனினும் மருத்துவ கல்லூரிகளில் தங்கள் போராட்டம் தொடரும் என்றனர். நியாயம் கிடைக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என்றும் கூறியுள்ளனர்.






