--- --:--:-- --

விஜய்க்கு நோ சொன்ன ஸ்ரீதேவி மகள் ஜான்வி!

13

றைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவர் எப்போது தென்னிந்திய படங்களில் நடிப்பார் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

இந்நிலையில் ஜான்வி விரைவில் தெலுங்கு சினிமாவில் களமிறங்க போகிறார் என தகவல் பரவி வந்தது. விஜய் தேவரக்கொண்டா ஜோடியாக ஜன ஜன மன (JGM) படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

 

பூரி ஜெகன்னாத் இயக்கும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. 2023 ஆகஸ்ட் ரிலீஸ் என தற்போதே அறிவித்து உள்ளனர்.இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கும் ஜான்வி கபூர் இந்த தெலுங்கு படத்தில் தான் நடிக்கவில்லை என மறுத்து இருக்கிறார். ‘யூகங்களை நம்பாதீங்க. நான் எந்த தெலுங்கு அல்லது தமிழ் படத்தில் நடிக்கவில்லை’ என அவர் கூறி உள்ளார். இதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

Right Menu Icon