--- --:--:-- --

சென்னை விமான நிலையத்தில் அதிநவீன வைஃபை வசதி!

3

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வெளிநாட்டு முனையத்தில் பயணிகளுக்கான நீண்டகால கோரிக்கையாக இருந்த இலவச வைஃபை சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி, வெளிநாட்டவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேவை ஜூன் 26 அன்று தொடங்கப்பட்ட நிலையில், அன்று 421 பயணிகள் வைஃபையைப் பயன்படுத்தினர்.

 

ஜூன் 29 அன்று, இந்த எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. தினமும் சுமார் 18,000 சர்வதேசப் பயணிகள் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவதால், வரும் நாட்களில் இதன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

 

இந்திய சிம் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் வைஃபையுடன் எளிதாக இணைந்துகொள்ளலாம். இந்திய சிம் கார்டு இல்லாத வெளிநாட்டினர், தங்கள் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டை கியோஸ்குகளில் ஸ்கேன் செய்து, அதன் மூலம் ஒரு OTP-ஐ உருவாக்கி தங்கள் போனை வைஃபையுடன் இணைக்கலாம்.

 

ஒரு பயணி 500 MB டேட்டா வரை அல்லது 45 நிமிடங்கள் வரை, எது முன்னதாக வருகிறதோ அதுவரை வைஃபையைப் பயன்படுத்தலாம்.

Right Menu Icon