--- --:--:-- --

ராணுவ உணவகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை..!

1

மேற்கு வங்க மாநிலத்தில் ஹசிமற பகுதியில் அமைந்திருக்கும் ராணுவ உணவகத்திற்கு புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை காட்டு யானை ஒன்று துவம்சம் செய்த காணொளி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

விளை நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் மேற்குவங்கத்தில் அவ்வப்போது நிகழ்வது வாடிக்கை. ஆனால் இம்முறை ஒற்றை யானையாக இருந்து ராணுவ வீரர்கள் நிறைந்த ஹசிமற உணவகத்திற்கு புகுந்தது.

 

அங்கு உணவு கிடைக்காததால் ஆத்திரமடைந்த அந்த ஒற்றை யானை அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை தும்பிக்கையால் தூக்கி வீசி எறிந்து பந்தாடியது. இதை தொடர்ந்து அங்கிருந்த ராணுவ வீரர் ஒருவர் தீப்பந்தம் கொளுத்தி அந்த யானையை உணவகத்தில் இருந்து துரத்தி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

 

இந்த காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon